யாழில் ஒஸ்மானியாக் கல்லூரியைத் திறந்து வைத்தார் அமெரிக்க தூதுவர் சமந்தா பவர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐ.நா.விற்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், யாழில் அமெரிக்க நிதியுதவியில் அமைக்கப்பட்ட ஒஸ்மானியா கல்லூரியின் கட்டடம் ஒன்றினை திறந்து வைத்துள்ளார்.
அத்தோடு, அந்தக் கல்லூரியின் மாணவர்களுக்கிடையிலான எல்லே விளையாட்டையும் ஆரம்பித்து வைத்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நிகழ்வில் அமெரிக்க தூதுவர் சமந்தா பவரோடு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் உபட்ட இன்னும் பலரும் பிரசன்னமாகியிருந்தமை குரிபீடத்தகக்து.