ஐ.நா குழுவினரை சுமந்திரன் சந்தித்துள்ளார்
இலங்கை வந்துள்ள காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் ஐக்கிய நாடுகளின் குழுவை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் சந்தித்துள்ளார்.
இதன் போது காணாமல் போனோர் மற்றும் அவர்களை கண்டறிவதற்கான நீதி பொறி முறை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.அத்துடன் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பொறிமுறைக்கு தொடர்ந்தும் பங்களிப்பு வழங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் ஐக்கிய நாடுகளின் காணாமல் போனோர் தொடர்பாக ஆராயும் குழுவினரிடம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.