நாடாளுமன்றின் 225 உறுப்பினர்களையும் வரவு செலவுத்திட்ட விவாதங்களில் பங்கேற்க உத்தரவு
அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக வரவு செலவுத் திட்ட விவாதங்களில் பங்கேற்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
வரவு செலவுத் திட்ட விவாதம் நடைபெறும் காலத்தில் அனைத்து அமைச்சர்களும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமர்வுகளில் பிரசன்னமாகியிருக்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இது குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் நிதி அமைச்சரினால் வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
வெளிநாட்டு முதலீடுகளை அதிகரித்து கடன்சுமையை குறைப்பதற்கும் கல்வி, சுகாதாரம், இளைஞர் வலுவூட்டல் போன்றவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.