தொடரும் அடைமழையால் யாழில் 2,228 குடும்பங்கள் இடம்பெயர்வு
யாழ். மாவட்டத்தில் சுமார் 2228 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலகம் தெரிவித்தது.சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 254 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.