ஐ.நாவிடம் காணாமல் போதல்கள் தொடர்பில் 22000 முறைப்பாடு
போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்னரும் இலங்கையில் இடம்பெற்ற காணாமல் போதல்கள் தொடர்பில் 22000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்பாடு செய்துள்ளோம் என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பலவந்த காணாமல் போதல்கள் குற்றச் செயலாக சட்டத்தில் குறிப்பிடப்பட வேண்டுமென அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுக்குமாறு தாம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பலவந்த காணாமல் போதல்கள் மற்றும் கடத்தல்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
காணாமல் போதல் மற்றும் கடத்தல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங்களை அரசாங்கம் முழுமையாக அமுல்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.