Breaking News

சிறையிலிருந்த கைதிகளில் 32பேருக்கு பிணை


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு
தடுத்து வைக்கப்படிருந்த சந்தேகநபர்களில் முதற்கட்டமாக 32 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமனறத்தில் இன்று அவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர்களுக்கு 10 லட்சம் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் என்ற அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது.

பிணை வழங்கப்பட்ட 32 பேரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் கொழும்பு அல்லது வவுனியா பொலிஸ் நிலையங்களில் அவர் தமது ஒப்பத்தினை கைச்சாத்திட வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னைய செய்தி.

இதேவேளை முன்னர் ஆயர் செய்யப்பட்ட 32 பேர் சட்டமா அதிபரிடமிருந்து பிணை கிடைக்காதமையால் அவர்களின் விடுதலை மேலும் தாமதமாகும் என்று கூறப்பட்டிருந்தது.

மிக நீண்டகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு கட்டம் கட்டமாக பிணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்திருந்தது. தீபாவளி தினமான நேற்று இவர்களில் சிலரை கொழும்பில் சந்தித்த மீள்குடியேற்ற அமைச்சர் டி எம் சுவாமிநாதன், அவர்களில் 32 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்படுவர் எனக் கூறியதாக பிளாட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்திருந்தார்.

இதை சிறைச்சலைகள் ஆணையர் ரோகன் புஷ்பகுமாரவும் ஊடகங்களுக்கு அறிவித்திருந்தார். "இனவாத நோக்கம்" ஆனால் கொழும்பு மகசின் சிறையிலிருந்து நீதிமன்றம் கொண்டு செல்லப்பட்ட 21 கைதிகளை பிணையில் விடுவிக்க உரிய பரிந்துரைகள் சட்டமா அதிபரிடமிருந்து வரவில்லை என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை எதிர்வரும் 24ஆம் தேதி வரை மேலும் விளகமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.