Breaking News

ஈழத்தமிழர் படுகொலைக்குப் புதிய சான்றுகள் வைக்கோ

ஈழத்தமிழர் படுகொலைக்குப் புதிய சான்றுகள் இருப்பதாகவும், இவை அதிர்ச்சி அளிப்ப தாகஉள்ளதாகவும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் வைக்கோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஸ்ரீலங்காவில் காணாமல் போனவர்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளச் சென்ற ஐ.நா.வின் விசாரணைக்குழு தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கிறது. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை கடற்படைத் தளத்தில் சித்திரவதைக் கூடங்கள் காணப்பட்டன.

அதில் 2010 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் அங்கு தொடர்ந்து சித்திரவதை செய்யப்பட்டதை நிரூபிப்பதற்குப் போதிய ஆதாரங்கள் உள்ளன. சுவர்களில் படிந்துள்ள இரத்தக்கறைகள், கை ரேகைகள், ஈழத்தமிழர்கள் தொடர்ந்த அந்த அறைகளில் சித்திரவதை செய்யப்பட்டு இருக்கின்றார்கள். இதுபோல இன்னும் பல இடங்களில் சித்திரவதை முகாம்கள் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளன என்றும், அந்தக் குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவில் ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்து சுதந்திரமான பன்னாட்டுப் புலன் விசாரணையும், நீதி விசாரணையுமே உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியும் என தாம் தொடர்ந்து கோரி வந்த போதிலும், ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்தியா செயற்பட்டு வருவதற்கு கண்டனம் வெளியிட்ட அவர்,

உலகெங்கும் வாழும் தமிழர்கள், நீதி கிடைக்கவும், விடியல் காணவும் தொடர்ந்து அந்தந்த நாடுகளிலும்அறப்போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.