ஞானசார தேரருக்கு பிடிவிறாந்து : நீதிமன்றம் பிறப்பிப்பு
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மாதிஸ்திரேட் நீதிமன்றம் திறந்த பிடிவிறாந்து ஒன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த பொதுத் தேர்தல் பிரசாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை வளாகத்தில் பிரசாரக் கூட்டமொன்றை நடத்தியதால் ஞானசார தேரர் தேர்தல் சட்டங்களை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது.
பிரசாரக் கூட்டத்தை பொது இடத்தில் நடத்துவதற்கு பொதுபல சேனாவிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் மு்னறிவித்தல் எதுவுமின்றி பிரசாரக்கூட்டத்தின் இடத்தை மாற்றியதாக வெளிபென்ன பொலிஸார் நீதிஜமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கவனம் செலுத்திய மத்துகம மேலதிக மாஜிஸ்திரேட் நீதிவான் ஹேமந்த சமரசேகர, ஞானசார தேரரை கைது செய்து முன்னிலைப்படுத்துமாறு பிடிவிறாந்து பிறப்பித்துன்னார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களான 4 பிக்குகள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.