Breaking News

சுமந்திரனுக்கு எதிராக வடமராட்சியில் சுவரொட்டி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுமந்திரனுக்கு எதிராக நேற்று(19) வடமராட்சி மற்றும் தென்மராட்சிப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக  தெரிவிக்கின்றன. 

வடமராட்சியின் கரவெட்டி , கரவெட்டி பிரதான வைத்தியசாலை , தச்சன் தோப்பு சிந்தாமணி ஆலயம் , சம்பந்தன் கடை ,மற்றும் கொடிகாமம் வீதி உள்ளிட்ட இடங்களில் சுமந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. 

சிவசிதம்பரத்தை ஸ்தாபகராகக் கொண்ட கரவெட்டி மாணிக்க வாசகர் வித்தியாலயத்தில் நாளை  [ சனிக்கிழமை ] நடைபெறவுள்ள பாடசாலையின் பரிசளிப்பு விழாவிற்கு பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் செல்லவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்பொருட்டே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பாரம்பரியம் மிக்க கற்றவர் மண்ணில் அனுமதியோம் ......
'' தமிழ் தேசத்து உறவுகளே .....
தமிழ் தேசிய சிந்தனையையும் எங்கள் முதலமைச்சரின் செயற்பாடுகளையும்  கொச்சைப் படுத்தும் சுமந்திரனை 
முதலமைச்சரே இன்றைய தமிழனின் வழிகாட்டி ...
கற்றவர் மண்ணில் நீயா?.... சுமந்திரனே வெளியேறு ...” போன்ற வாசகங்கள் சுவரொட்டிகளில் காணப்படுகின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதள் ஒன்றின் தலைப்புச் செய்தியை பிரதிசெய்து அதனுடன் சில வாசகங்களையும் சேர்த்து குறித்த சுவரொட்டிகள் காணப்படுகின்றன.