அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்! மகிந்த
அரசாங்கத்தை விமர்சிக்கும் அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ள அமைச்சர்கள் தங்கள் அமைச்சுப் பதவியில் நீடிக்கக் கூடாதென்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அமைச்சர்கள் உடனடியாக பதவியிலிருந்து விலகி விட்டு, அதன் பின்னர் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசிக்க வேண்டுமென்று மகிந்த கேட்டுக்கொண்டுள்ளார்.அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொண்ட பிறகு, அமைச்சுப் பதவிகளை வகிப்பது நல்ல பண்பு அல்ல என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.