Breaking News

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மக்களுக்கு உலர் உணவு விநியோகம்

மழை வெள்ளத்தால் இடம்பெயர்ந்து பாடசாலைகளிலும் பொதுமண்டபங்களிலும் தங்கியுள்ள கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கு, வட மாகாண விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறையினூடாக உலர் உணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, மாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) நேரில் சென்று சந்தித்து உணவுப்பொதிகளை வழங்கியுள்ளனர்.

உழவனூர், பிரமந்தனாறு, புன்னைநீராவி, நாதன்குடியிருப்பு, தருமபுரம், கண்டாவளை, முரசுமோட்டை, ஆனைவிழுந்தான், பரந்தன், உமையாள்புரம், பொன்நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கே இவ்வாறு உலர் உணவுப்பொதிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வடக்கு விவசாய அமைச்சின் உணவு வழங்கல் துறையால் அரிசி, மா, பருப்பு, சீனி, தேயிலை, பிஸ்கட் அடங்கியுள்ள உணவுப்பொதிகள், வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் வெள்ளத்தால் இடம்பெயர்ந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.