ஜனாதிபதி முறையை ஒழிக்க ஶ்ரீ.ல.சு.க அனுமதி!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பது குறித்து ஜனாதிபதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கும் யோசனைக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கும், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது குறித்த இரண்டு விசேட அமைச்சரவைப் பத்திரங்கள் இன்று (18) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசுனவினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்து, அந்தப் பதவிக்கான அதிகாரங்களை நாடாளுமன்றம், சுயாதீன ஆணைக்குழுகள் ஆகியவற்றுக்கு வழங்குவதற்குத் தேவையான அரசியல் யாப்புத் திருத்தங்கள் குறித்து பிரதமருடன் ஏற்கனவே பேச்சு நடத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.