குமார் குணரத்னத்துக்கு 18 வரை விளக்கமறியல்
முற்போக்கு சோசலிசக் கட்சியின் அரசியல்துறை உறுப்பினர் குமார் குணரத்னத்தை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேகாலை, ருவன்வெல்ல, அங்குருவல்ல பகுதியில் வைத்து நேற்று இவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர், இவர் கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா வீசாவில் இலங்கை வந்த இவர், வீசா காலாவதியாகியும் நாட்டிலிருந்து வெளியேறிச் செல்லவில்லை என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுமை குறிப்பிடத்தக்கது