தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் - மஹிந்த
தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டமையானது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அங்குனுகொலபெலஸ்ஸ அலுத்வெள பகுதியில் நேற்று நடைபெற்ற வைத்திய சிகிச்சை முகாமொன்றில் கலந்து கொண்டபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களென தெரிவித்த மஹிந்த, அவர்களை விடுவித்து அரசாங்கம் பாரிய தவறிழைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 200 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் 39 பேர் இதுவரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.