வெள்ளத்தினால் இடம்பெயர்ந்தவர்களை பார்வையிட்ட வடக்கு முதல்வர்!
இடம்பெயர்ந்த மக்கள் பாடசாலைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய அசாதாரன காலநிலயை அடுத்து கடந்த நாட்களில் அடை மழையினால் வட மாகானத்தில் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதோடு சுமார் 20 ஆயிரம் பேர் பொது இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வாறு பொது இடங்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது மல்லாகம் மகா வித்தியாலயத்தில் தங்கியுள்ள தெல்லிப்பழை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லாரை கிராம j/212 வெள்ளத்தால் பாதித்த மக்களின் அடிப்படை சுகாதார ஏற்பாடு, குடிநீர் பிரச்சனை, உணவு சமையல்கூடப் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டதோடு நிலமைகளை நேரிலும் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து இடம்பெயர்ந்து 25 வருடங்களுக்கு மேலாக கோணாப்புலவு இடைத்தங்கள் முகாமில் வசிக்கும் மக்களின் அவலத்தையும் நேரில் பார்வையிட்டு அவர்களிற்கான உடனடித் தேவைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டதோடு வட மாகாண சபையின் விவசாய அமைச்சின் உணவு வழங்கல் பகுதியினரின் ஏற்பாட்டில் இம் மக்களிற்கான உணவுப் பொதிகளையும் வழங்கிவைத்தார். இந்த சந்திப்பில் வடமாகாண விசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனும் பங்கேற்றிருந்தார்.