Breaking News

கைதிகளின் நிலை கவலைக்கிடம் : விக்னேஸ்வரன் கொழும்பு சிறைச்சாலைக்கு திடீர் விஜயம்

தம்மை விடுவிக்குமாறு கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவசரமாக கொழும்பு சென்றுள்ளார்.

கொழும்பு சிறைச்சாலைக்கு இன்று (திங்கட்கிழமை) சென்று கைதிகளை பார்வையிட்ட அவர், அவர்களின் நிலைகுறித்து பல்வேறு தரப்பினருடன் தொலைபேசி கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து அரசாங்கத்திடமிருந்து இதுவரை பதில் எதுவும் கிடைக்காத நிலையில், கைதிகளுக்கு உயிராபத்து ஏற்படலாமென்ற அச்சத்தில் வடக்கு முதல்வர் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் விக்னேஸ்வர்ன பேச்சுவார்த்தை நடத்தியபோது, இன்றைய தினம் பதில் தருவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.