சந்தர்ப்பத்தை நாம் இழந்துவிடக் கூடாது - நம்பிக்கைக்கு பாத்திரமாக அரசும் நடந்துகொள்ள வேண்டும்
தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அவர்களின் விடுதலை வேண்டிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
அதேவேளை, கட்டம் கட்டமாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை அவர்கள் ஒருபோதும் இழந்துவிடக்கூடாது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், யாழ்.பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்
மேலும், அரசாங்கம் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், நியாயபூர்வமாகவும் நடந்துகொள்ள வேண்டும். அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தும். முன்னைய அரசுகளை போன்று கொடுத்த வாக்குறுதிகளை பின்வாங்கும் நடவடிக்கைகளில் புதிய அரசு ஒருபோதும் ஈடுபடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.
பிணை வழங்கும் முடிவை நிராகரித்து தமிழ் அரசியல் கைதிகள் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கப் போவது தொடர்பில் அவரிடம் குறித்த பத்திரிகை கேள்வி எழுப்பியபோதே பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், உளவுத்துறை உயரதிகாரிகள் ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் கைதிகளின் விடுதலை குறித்து நீண்ட நேரம் பேச்சுக்களை நடத்தினர்.
இச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அரசியல்கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்து அரசாங்கம் தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்வதுடன், தனது வாக்குறுதியை தக்கவைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இரா.சம்பந்தன் சுகவீனமுற்றுள்ள நிலையிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தனது கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக முன்வைத்தார். அதேவேளை, சர்வதேச மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கேற்ப தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை அவசியமானது என்ற கருத்தை பிரதமர் மற்றும் நீதியமைச்சர் ஆகியோர் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு எடுத்து விளக்கினர்.
அந்தவகையில், கைதிகளின் விடுதலை விரைவாக இடம்பெற வேண்டும் என்பதில் கூட்டமைப்பு தொடர்ச்சியாக அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றது.கடந்த காலங்களில் அரசாங்கம் தனது வாக்குறுதிகளை மீறியதன் காரணமாக தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்கள் வலுவடைந்துள்ளன. எனவே, அரசாங்கம் புற அழுத்தங்களைக் கண்டு அஞ்சாது கைதிகளின் விடுதலையை துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பயங்கரவாத சட்டத்தை நீக்குவதன் மூலமே சகல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையும் சாத்தியமாகும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் மக்களின் மன உணர்வுகளை புரிந்த வகையில் செயற்படுவதுடன் கடந்த பல வருடங்களாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்து வைத்திருக்கும் தமிழ் அரசியல்கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய வேண்டும். இதன்மூலமே தமிழ் மக்கள் மத்தியில் அரசாங்கம், நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
இதேவேளை, எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமையால் எமது விடுதலையை வலியுறுத்தும் வகையில் இடைநிறுத்திய உண்ணாவிரதப் போராட்டத்தை ஞாயிறு முதல் தொடரப் போவதாக நாடளாவிய ரீதியில் உள்ள 14 சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 217 தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.
தமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாக்குறுதியோடு எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வழங்கிய உறுதிமொழிக்கு அமைவாகவே கடந்த மாதம் 12ஆம் திகதி ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை 17ஆம் திகதி தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும், நாட்டில் பயங்கரவாதச்சட்டம் மற்றும் அவசரகாலச்சட்டம் அமுல்படுத்தப்பட்டு அச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை பல்வேறு தடவைகளில் கோரியிருந்த போதும் அக்கோரிக்கைகள் அந்தந்த காலத்தில் அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டனவே தவிர எமது உறவுகளுக்கான தீர்வுகள் எவையும் வழங்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை ஏற்படுத்தும் அரசாங்கமொன்று கடந்த ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர் ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் மீண்டும் புதிய அரசாங்கம் ஆட்சிப்பீடமேறியது.
புதிய அரசாங்கம் பதவியேற்று ஆறுமாதங்கள் உருண்டோடியிருக்கும் நிலையில் எம் உறவுகளின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான ஆக்கபூர்வமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டிருக்கவில்லை என்றும் கைதிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையிலேயே, அரசியல் கைதிகள் கடந்த மாதம் 12ஆம் திகதி தமக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலையளியுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து உயிர் துறக்கும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
எனினும் ஐந்து தினங்கள் கடந்த நிலையில் பல்வேறு கருத்துக்களுக்கு மத்தியில் ஒக்டோபர் 31ஆம் திகதி முதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு நவம்பர் 7ஆம் திகதிக்கு முன்னதாக இவ்விடயத்திற்கு நிரந்தர தீர்வளிக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தனுடனான தொலைபேசிக் கலந்துரையாடலில் வாக்குறுதியளித்திருந்தார்.
எவ்வாறெனினும் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான உயர்மட்டக்குழுவினரை கடந்த புதனன்று சந்தித்த போது பகுதி பகுதியாக பிணையில் விடுதலையளிக்கப்படுவதாகவே கூறப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக திங்கட்கிழமை 30பேரும் 20ஆம் திகதிக்கு முன்னதாக 32பேரும் பிணையில் விடுதலையளிக்கப்படவுள்ளனர். 48பேர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களின் விடுதலை தொடர்பாக ஜனாதிபதியே இறுதி தீர்மானம் எடுக்கவேண்டும். ஏனையோரின் விடுதலை தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்துடன் அமைச்சரவை குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது. அக்குழுவானது அவர்களின் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றே தெரிவிக்கப்பட்டது.
இதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறியே தமிழ் அரசியல்கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் மேற்கொண்ட கிளர்ச்சியின் போது அவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்தார்கள். பின்னர் அவர்களை விடுதலை செய்யும் போது சிறுகுற்றமிழைத்தவர்கள், பெருங்குற்றமிழைத்தவர்கள் நடுத்தரக்குற்றமிழைத்தவர்கள் என வகைப்படுத்தாது ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பளித்தே விடுதலை செய்தார்கள்.
இதனடிப்படையில், சந்தேகத்தின் பேரிலும், சிறு குற்றச்சாட்டுக்களுடனும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு ஏன் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யமுடியாது எனவும் அவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
அத்துடன் யுத்தத்தில் நேரடியாக தொடர்புபட்ட 12 ஆயிரம் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து டது.இதனை தம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது என கூறியே தமிழ் அரசியல்கைதிகள் மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
கடந்த காலத்தில் ஜே.வி.பியினர் மேற்கொண்ட கிளர்ச்சியின் போது அவர்களை கைது செய்து சிறைகளில் அடைத்தார்கள். பின்னர் அவர்களை விடுதலை செய்யும் போது சிறுகுற்றமிழைத்தவர்கள், பெருங்குற்றமிழைத்தவர்கள் நடுத்தரக்குற்றமிழைத்தவர்கள் என வகைப்படுத்தாது ஒட்டுமொத்தமாக பொதுமன்னிப்பளித்தே விடுதலை செய்தார்கள்.
இதனடிப்படையில், சந்தேகத்தின் பேரிலும், சிறு குற்றச்சாட்டுக்களுடனும் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள எமது உறவுகளுக்கு ஏன் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யமுடியாது எனவும் அவர்களின் உறவினர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
அத்துடன் யுத்தத்தில் நேரடியாக தொடர்புபட்ட 12 ஆயிரம் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்துள்ள நிலையில், ஏன் தம்மை விடுதலை செய்ய முடியாது என்றும் அரசியல் கைதிகள் மேலும் கோருகின்றனர்.