வடக்கு பாடசாலைகள் மூடல்
சீரற்ற காலநிலை காரணமாக, வட மாகாணத்தின் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன் அறிவித்துள்ளார்.
அசாதாரண காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் வட மாகாணத்தில் சில பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளமை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் நாளையதினம் வழமைப் போல பாடசாலைகள் நடைபெறும். இன்று வழங்கப்பட்ட விடுறையை ஈடுசெய்வதற்காக எதிர்வரும் சனிக்கிழமை மேலதிக தினமாக பாடசாலைகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.