அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் உண்ணாவிரத போராட்டம்
அரசியல்- மற்றும் போர்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவுஸ்திரேலியால்அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று நடைபெற்று வருகின்றது.
பல ஆண்டுகளாக அரசியல்- மற்றும் போர்க்கைதிகளாக சிங்கள பேரினவாத அரசின் சிறைகளில் வாடும் எங்கள் உறவுகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் அவர்களை உடனடியான விடுதலையை வலியுறுத்தியும் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகிய இப் போராட்டமானது மாலை 5 மணி வரையு்ம் நடைபெறும் என்று, தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிவித்துள்ளது