ஹெகலியவுக்கு பிடியாணை உத்தரவினை யாழ்ப்பாணம் நீதவான் பிறப்பித்துள்ளார்
முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிற்கான பிடியாணை உத்தரவினை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பி.சிவகுமார் இன்று பிறப்பித்துள்ளார்.
யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற லலித், குகன் காணமல் போன சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையின் போதே அவருக்கன பிடியாணை நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த முக்கள் போராட்ட இயக்கத்தின் லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முரகானந்தன் என்பவர்கள் யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் வைத்துக் காணமல் போயிருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் வழக்கென்றும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது கடந்த 3 முறை நீதிமன்றத்தில் தோன்றி வாக்குமூலம் பதிவு செய்யுமாறு முன்னாள் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவிற்கு நீதவான் அழைப்பாணை வழங்கியிருந்தார்.
இருப்பினும் அவர் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணைகளுக்கும் மன்றில் சமூகமளிக்கவில்லை.
இதனாலேயே அவருக்கான பிடியாணை உத்தரவினை நீதவான் பிறப்பித்திருந்தார்.