திருநடேசனுக்கும் ரணிலுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு – அனுர
நாட்டின் மிகப் பாரிய நிதி மோசடிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த பாரியளவிலான நிதி மோசடிகளின் திரைமறைவில் இடைத்தரகராக செயற்பட்ட முக்கியஸ்தர்களில் திருநடேசன் முக்கியமானவர் என தெரிவித்துள்ளார். இந்த திரு.நடேசன் என்ற நபருடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நெருங்கிய உறவுகளைப் பேணி வந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த தோல்வியைத் தழுவியதன் பின்னர், அதிகாலை வேளையில் அலரி மாளிகைக்கு ரணில் சென்றிருந்தார் எனவும் எனவும் அவ்வாறு செல்லும் போது திருநடேசனும் ரணிலுடன் சென்றிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
திரு.நடேசன், முன்னாள் அமைச்சரும் மஹிந்தவின் ஒன்றுவிட்ட சகோதரியுமான நிருபமா ராஜபக்ஸவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.