டிலான் பெரேரரா, மஹிந்தவிற்காக 14 கோடி செலவு செய்து பிரச்சாரம் செய்துள்ளார்
அமைச்சர் டிலான் பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 14 கோடி ரூபா செலவழித்து பிரச்சாரம்செய்துள்ளார்.
குறித்த காலப்பகுதியில் டிலான் பெரேரா வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சராக கடமையாற்றியிருந்தார். விளம்பரங்களுக்காக மட்டும் 14 கோடி ரூபாவினை டிலானின் அப்போதைய அமைச்சு செலவிட்டுள்ளது.
இந்த தகவல்களை தற்போதைய வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு மேலதிகமாக பாத யாத்திரை ஒன்றுக்காக 91 லட்ச ரூபாவும், மத வழிபாடுகளுக்காக 35 லட்ச ரூபாவும், கட்டிட வரி செலுத்துகைக்காக 2 கோடி ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது.