Breaking News

அவுஸ்ரேலியாவில் மன்னிப்பு கோரினார் சுமந்திரன்

சுமந்திரனின் தமிழ்த் தேசியத்திற்கெதிரான
செயற்பாட்டினால் அவுஸ்ரேலிய தமிழ் செயற்பாட்டாளர்களிடையே பிளவினை எதிர்கொள்ளுமளவிற்கு நிலமை மோசமடைந்திருக்கிறது.

மேலும் விடயங்களை அறியும் முகமாக தமிழ்கிங்டொம் செய்தியாளருக்கும் கிடைக்கும் தகவலின்படி அவுஸ்ரேலிய தமிழ் காங்கிரசில் கிட்டத்தட்ட 150பேர் உறுப்பினர்களாக இருக்கின்றபோதும் தமிழ்த் தேசியத்திற்காக குரல்கொடுப்பவர்கள் 120இற்கு மேற்பட்டவர்கள் இருப்பதாகவும் அதுபோல அவுஸ்திரேலிய த.தே.கூட்டமைப்பில் ஐந்தாறு பேர்வரையே செயற்படுவதாகவும் அறியவருகின்றது.


இது இவ்வாறிருக்க கடந்த சிட்னி கூட்டத்தில் தமிழ்ச் செயற்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் மற்றும் தமிழ்த் தேசியத்தை ஆதரிப்பவர்களின் மனதில் சுமந்திரனின் கடந்தகால, அண்மைக்கால செயற்பாடுகளும் அறிக்கைகளும் மேலும் ஆத்திரத்தினை உண்டுபண்ணியிருந்தது.

கடந்த வாரம் சிட்னியில் சுமந்திரனுக்கெதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அவுஸ்திரேலியக் காவல்துறையின் துணையுடன் அடக்கிய அவுஸ்திரேலியத் தமிழ்க் காங்கிரஸினர் சிலர், மெல்பேர்ண் தேசப்பற்றாளர்களின் எதிர்ப்பையும் மீறி மெல்பேர்ணிலும் ஏற்கனவே திட்டமிட்டபடி நடாத்தப்படும் என அவுஸ்ரேலிய நக்கீரன்களாக செயற்படும் இருவர் மிகத்தீவிரமாக இருக்க தமிழ்ச் செயற்பாட்டர்கள் மத்தியில் மிகுந்த ஆத்திரத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. 

மாலை 5 மணியளவிலேயே, நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்துக்கு பதாகைகள் சகிதம் வருகை தந்த ஒரு பகுதி மக்கள் எவரையும் மண்டபத்தின் உள்ளே நுழைய விடுவதில்லை என்று கூறினார்கள். மண்டபத்துக்கு வெளியில் சுமந்திரனின் வருகைக்காக காத்திருந்த அந்த மக்கள் கூட்டத்தினர் சிலர், மண்டபத்தின் உள்ளே ஏற்கனவே நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அவர்களுக்கு முன்னதாகவே வந்துவிட்டதை கண்டறிந்து, “சுமந்திரனை உள்ளேயா ஒழித்து வைத்திருக்கிறீர்கள்” என்று கூச்சலிட்டவாறே ஓடிச்சென்று, நிகழ்வு ஏற்பாட்டளர் ஒருவர் உட்பட இருவர் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் சிறிது நேரத்திலேயே அந்த முறுகல்நிலை அங்கிருந்த சிலரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று கூறினர். ஆனால், நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் அதனை நம்ப மறுத்த அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இரவு 7.30 மணிவரை அங்கேயே நின்றுகொண்டிருந்தனர்.

உண்மையிலேயே இன்று கூட்டம் நடைபெற்றிருந்தால் சுமந்திரனின் நிலை மிகமோசமான நிலைக்கு சென்றிருக்கும் எனத் தெரிவிக்கும் தமிழ்க் காங்கிரசின் மூத்த பேராசிரியர் ஒருவர் ஒருசிலரின் முடிவால் த.தே.கூட்டமைப்பு மற்றும் தமிழ்க்காங்கிரசிலிருந்து விலகியிருக்க பலர் தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கும் தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தை புறக்கணிக்க வாகனத்திலேறிச் சென்ற சுமந்திரனின் 7பேர் கொண்ட ஆதரவு குழு வீடுஒன்றில் தமது தேனீர் விருந்தை கழித்துவிட்டு சம்பந்தப்பட்ட ஒருசிலரோடு பேசி சிட்டியில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பும் கோரியிருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. பின்னர் தனியார் வானொலியொன்றிலும் மிகுதி கூட்டத்தை நடாத்தி முடித்திருக்கின்றார். 

களத்திலும் புலத்திலுமுள்ள தமிழ்த்தேசிய சக்திகளை பிளவுபடுத்துவதற்கு கட்டாயமாக சுமந்திரனை தேர்தலில் வெல்லவைக்க வேண்டிய தேவை ரணிலுக்கு இருந்த காரணத்தால் அந்தபணியை கச்சிதமாக வல்லாதிக்க நாடொன்றின் அனுசரணையோடு ரணில் செய்து முடித்துவிட்டு சுமந்திரனை வைத்தே தமிழ்மக்கள்மீதும்,குறிப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்றச்சாட்டுக்களை மட்டுமல்ல இனவழிப்பை தமிழர் தரப்பு செய்தது என்று உலகநாடுகள் எல்லாவற்றுக்கும் சென்று பரப்புரை செய்து வருவதோடு, பின்னர் தாயகம் திரும்பி அங்குள்ள மக்களிடம் அரசைபற்றி குறைகூறி மக்களை ஏமாற்றி வருகின்றார்.

போர்க்குற்றச்சாட்டுடன் நின்றுவிடாத சுமந்திரன் அவுஸ்ரேலியாவில் வைத்து வடமாகாண முதலமைச்சரை விளக்கம் கேக்கும் நிலையை கடந்து அவரை நீக்க வேண்டும் அதனை கட்சி இன்னும் செய்யவில்லை அதனை செய்தே ஆகவேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக கூறவே ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மிச்சமாகவுள்ள முதலமைச்சர் மீது கைவைக்கவே தமிழ்த் தேசியவாதிகள் மத்தியில் பலத்த கோபத்தை உண்டுபண்ணியிருப்பதாக அறிய வருகின்றது.

இதேவேளை கைதிகள் சாகும்வரையிலான உண்ணாவிரத்ததை ஆரம்பித்திருக்கின்றவேளை  கைதிகளில் சிலர் நீர்கூட அருந்தாது உண்ணாவிரதத்தை கடைப்பிடித்து வரும்வேளை த.தே.கூட்டமைப்பின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருப்பது இங்கு நோக்கத்தக்கது.

தொடர்புடைய முன்னைய செய்தி


சுமந்திரனின் இன்றைய கூட்டம் ரத்து ?-ஆர்ப்பாட்டக்காரர்கள் வெளியே(காணொளி)

துரோகி சுமந்திரனே வெளியேறு! அவுஸ்திரேலியாவிலும் மூக்குடைபட்டார் சுமந்திரன்!(காணொளி)

முதலமைச்சர் கட்சியிலிருந்து நீக்கம் ? -சின்ன கதிர்காமர்(காணொளி)


இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)