இராணுவ ஆட்சிக்கு முற்றுப் புள்ளி: மியன்மாரில் சூகியின் கட்சி முன்னிலை
மியன்மார் தேர்தலில் நோபல் பரிசு பெற்ற ஆங்சாங் சூகியின் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி முன்னிலை வகித்து வருகின்றது.
இக் கட்சியானது ஆட்சியமைக்க பெரும்பான்மையாகத் தேவையான 329 ஆசனங்கள் என்ற இலக்கைத் தாண்டியுள்ளதாக, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
மியன்மாரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இராணுவ ஆட்சி நடைபெற்ற நிலையில், இந்த சர்வாதிகார ஆட்சிக்கு சர்வதேச அளவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் பொருளாதார தடைகளை எதிர்க்கொள்ள வேண்டிய சூழ்நிலை இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டது. இதனையடுத்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக அங்கு ஜனநாயக ரீதியிலான பொதுத் தேர்தல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.