138 ஆண்டுகளின் பின் நடெபெறும் பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று
அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி அடிலெய்டில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இந்தப் போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறுகின்றது.
138 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் பகலிரவாக நடைபெறவுள்ள முதல் போட்டி இதுவாகும். வழக்கமாக டெஸ்ட் போட்டிகளின் போது சிவப்பு நிற பந்துகள் பயன்படுத்தப்படும்.
ஆனால் இந்தப் போட்டி மின்னொளியில் நடைபெறவிருப்பதால் இளஞ்சிவப்பு நிற பந்து பயன்படுத்தப்படவுள்ளது. முதல் போட்டியில் 208 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவிடம் நியூஸிலாந்து தோல்வியடைந்த நிலையில், 2-வது போட்டி சமநிலையில் முடிவுற்றது.