வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை ஆராய அப்பகுதிகளுக்கு நேரில் செல்வேன் - ஜனாதிபதி
உள்ளூரில் உற்பத்திசெய்யக்கூடிய உண வுப்பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலம் 200 பில்லியன் ரூபாவுக்கும் அதிக மான தொகை செலவாகின்றது. இதனை தடுத்து நிறுத்துவதற்கு உள்ளூர் உற்பத்திகள் ஊக்குவிக்கப்படவேண்டும்.
இதன் பொரு ட்டு வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இவ் விடங்கள் தொடர்பில் நேரடியாக ஆராயவுள்ளேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை உள்ளூர் உணவுப் பொருள் உற்பத்திவேலைத்திட்டத்தை வெற்றி கரமாக முன்னெடுப்பதற்கும் அதன் இலக் குகளை அடைவதற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன் போது வலியுறுத்தியுள்ளார்.வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டறிவதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உணவு உற்பத்தி தேசிய வேலைத் திட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் விவசாயத்தை மேற்கொள்ளக்கூடிய ஒவ்வொரு காணித்துண்டையும் விவசாயத்திற்கு உட்படுத்தி இலங்கையில் உற்பத்தி செய்யக்கூடிய உணவுவகைகளிலான உற்பத்தியில் தன்னிறைவு பெறுவது தொடர்பாக இந்த கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது, எதிர்காலத்தில் நான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விஜயம் செய்து இவ்வேலைத்திட்டத்தின் செயற்றிறன் தொடர்பில் ஆராயவுள்ளேன்.
வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகளை நேரடியாகக் கண்டறிவதற்காக அங்கு விஜயம் செய்யவுள்ளேன்.உள்நாட்டு உணவு உற்பத்தியை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக சிறந்த விவசாயியை தெரிவு செய்யும் வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.
தேசிய உணவு உற்பத்திக்கான சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தல் மற்றும் விவசாயிகளை பலப்படுத்துதல் நடவடிக்கைகளை கமத்தொழில் அமைச்சு மற்றும் வர்த்தக அமைச்சுடன் கூட்டிணைந்து மேற்கொள்வது முக்கியமானதாகும். உணவுவகைகளை இறக்குமதி செய்வதற்காக 200 பில்லியன் ரூபாவுக்கு அதிகமானதொகை செலவாகிறது. எனவே உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதன் மூலம் இதனை தடுக்க முடியும்.
இரசாயனப் பொருட்கள், கிருமி நாசினிகள் பாவனையை குறைத்து சூழலுக்கு உகந்த முறைமைகளை முன்னெடுத்து உள்ளூர் உற்பத்தியை முன்னெடுப்பதே உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.