மடு கல்விவலையத்தில் -ஊழல் மோசடியும் பாலியல் குற்றச்சாட்டும்-தீப்பொறி
ஊழல் மோசடிகள் மற்றும் பாலியல் ரீதியிலான
துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்காக உரிய காலத்திற்கு முன்னர் வடமாகாண கல்வியமைச்சின் ஆதரவுடன் ஒய்வுபெற எத்தனிக்கும் மடுவலய கல்விப்பணிப்பாளர்
மடுவலய கல்விப்பணிப்பாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வருபவர் பல்வேறுபட்ட பாரிய ஊழல் மோசடிக் குற்றச்சாட்டு மற்றும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுபடுவதற்காக வடமாகாண கல்வியமைச்சு, வடமாகாண கல்வித்திணைக்களம், வடமாகாண பிரதமசெயலாளர் மற்றும் வடமாகாண கணக்காய்வுத் திணைக்களம் என்பவற்றின் ஆதரவுடன் தனது சேவைக்கால முடிவுக்கு முன்னர் ஒய்வுபெற எத்தனித்துள்ளார்.
குறித்த வலயக்கல்விப்பணிப்பாளர் கடந்த மாதம் தனது அலுவலகத்தில், பயிற்சிக்காக NITTA நிறுவனதின் ஊடாக அனுப்பட்ட இளம் யுவதியை பாலியல் ரீதியிலான ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக குறித்த யுவதியால் மாகாண கல்வியமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் எவ்வித நடவடிக்கையும் குறித்த அதிகாரிக்கு எதிராக எவ்வித சட்டநடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் அவரை காப்பாற்றும் நடவடிக்கையில் மாகாண கல்வியமைச்சு ஈடுபட்டுள்ளததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதே போன்று குறித்த அதிகாரியினால் மடு வலயத்தில் கடமையாற்றும் பல இளம் ஆசிரியைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட போதும் இவரின் அச்சுறுத்தல் காரணமாக எவ்வித முறைப்பாடுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இச்சம்பவத்தை அறிந்த பெற்றோர், இதே காலப்பகுதியில் தட்சணாமருதமடு பிரதேசத்தில் இடம்பெற்ற வடமாகாணசபையின் நடமாடும் சேவை நிகழ்வுக்கு வருகை தந்த முதலமைச்சரிடம் முறையிட்ட போது, மேற்படி அதிகாரி தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டாம் என வடமாகாண பிரதம செயலாளரால் பணிப்புரை விடுக்கப்பட்டதாக அறியக்கிடைத்துள்ளது.
இதைவிட குறித்த வலயத்திற்கு கடந்த வருடம் கணக்காய்வுக்காக வருகைதந்த வடமாகாண கணக்காய்வுக்குழுவுக்கு இவர் பல்வேறுபட்ட பாரிய ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமைக்கான பல ஆவணங்கள் பல பாடசாலைகளில் சிக்கிய போதும் இதுவரை காலமும் எவ்வித சட்டநடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பில் உரிய விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டு நீதியை நிலைநாட்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
மடுவிலிருந்து-சாள்ஸ் ஜெயிநோட்