தண்ணீரில் மூழ்கும் தமிழகம்! 113க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
தமிழகம் முழுவதும் பரவலாக பெய்துவரும் கனமழை காரணமாக113க்கும் க்கும்மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொட ர்ந்து மழை பெய்துவருவதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு, சென்னை உட்பட மாநிலத்தின் பலபகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புபணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இதற்காக, ஆந்திராவிலிருந்து தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர் 140 பேர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னை, விழுப்புரம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் பெய்துவரும் கன மழை யின் காரணத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஜெயலலிதா, தலா, நான்கு இலட்சம் ரூபா நிவாரண நிதி அறிவித்துள்ளார்.
தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பாடசாலைகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு,மேலும் சில நாட்களுக்கு மழைவீழ்ச்சி தொடரும் என வானிலைமையம் அறிவித்துள்ள நிலையில் மழையின் காரணமாக வீதி மற்றும் ரயில் போக்கு வரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.