Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு

சிறைச்சாலைகளில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு சார்பில் இந்த மஜகர் இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை சக்திவேல், சட்டத்தரணிகளான சேனக்க பெரேரா, ஸ்ரீநாத் பெரேரா மற்றும் குறித்த அமைப்பின் செயற்பாட்டாளர்கள் இருவர் உட்பட 6 பேர் குறித்த மகஜரை கையளித்திருக்கின்றனர்.