Breaking News

“ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே இவ்வுலகின் இருப்புக்கு அடிப்படை” - ஜனாதிபதி

ஐக்கியத்துடன் கூடிய நல்லிணக்கமே பேதங்கள் எது­வு­மற்ற ஐக்­கியம் அர­சாட்சி செலுத்தும் இவ்­வு­லகின் இருப்­புக்குத் தேவை­யான அடிப்­படை நிபந்­தனை என்­பதை மிகவும் பிர­கா­ச­மான விளக்­கொளி பூஜை மூலம் வலி­யு­றுத்தும் நன்­நாளே தீபா­வ­ளித்­தி­ருநாள் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, இலங்­கையில் வாழும் அனைத்து இந்­துக்­க­ளுக்கும் இதய பூர்­வ­மான பக்­திப்­பெ­ரு­மித தீபா­வளி பண்­டிகை வாழ்த்­துக்­களைத் தெரி­வித்துக்கொள்­வ­தா­கவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

தீபா­வளித் திரு­நாளை முன்­னிட்டு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விடுத்­துள்ள வாழ்த்துச் செய்­தி­யி­லேயே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அவ் வாழ்த்துச் செய்­தியில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­வது

உல­கெங்­கிலும் வாழும் இந்­துக்­களால் வெகுவிம­ரி­சை­யாகக் கொண்­டா­டப்­படும் தீபா­வ­ளித்­தி­ருநாள் உல­கி­லி­ருந்து தீய செயல்­களைப் போக்கி நற்­செ­யல்­களை நிலை­நாட்­டு­வதை அடிப்­ப­டை­யாகக் கொண்­டுள்­ள­மையால் ஏனைய உலக மக்­க­ளுக்கும் இந்­தி­ருநாள் முக்­கி­யத்­துவம் வாய்ந்த ஒரு நாளாகக் காணப்­ப­டு­கி­றது.

உலகை சிறந்­ததோர் இட­மாக மாற்­று­வ­தற்கு மனித நாக­ரி­கத்தின் ஆரம்­ப­கால யுகங்­க­ளிலும் மனி­தனால் பல்­வேறு முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்ற உண்மை தற்­போ­தைய தீபா­வளிக் கொண்­டாட்­டங்­க­ளி­லி­ருந்து நாம் அறிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தா­யுள்­ளது.

ஒளி­வி­ளக்­கு­களை ஏற்­று­வதன் மூலம் உரு­வாகும் ஒளி­யா­னது இருளை அகற்­று­வதைப் போன்று தீபா­வ­ளியின் தீப­வொளி அனைத்து மனித மனங்­க­ளிலும் ஒளி­வீ­சு­வதன் கார­ண­மாக அவர்­க­ளுக்குள் எரிந்துகொண்­டி­ருக்கும் ஐக்­கி­யத்­துடன் கூடிய நல்­லி­ணக்கம் உலகின் அனைத்து நாக­ரி­கங்­க­ளுக்கும் உரித்­தான மனி­தர்­களின் பொது­வான பிரார்த்­த­னை­யாக மாற்­ற­ம­டை­கின்­றது.

அது பேதங்கள் எது­வு­மற்ற ஐக்­கிய அர­சாட்சி செலுத்தும் இவ்­வு­லகின் இருப்­புக்குத் தேவை­யான அடிப்­படை நிபந்­தனை என்­பதை மிகவும் பிர­கா­ச­மான விளக்­கொளி பூஜையின் மூலம் எமக்கு வலி­யு­றுத்­து­கி­றது.

இவ்­வா­றான நற்­செ­யல்­களை நோக்­க­மாகக் கொண்ட பொது­வான பழக்கவழக்­கங்­க­ளி­னூ­டா­கவே மானிடப் பரி­ணாம வளர்ச்­சி­யா­னது பய­னு­று­தி­வாய்ந்­த­தாக இன்­று­வரை வியா­பித்­துள்­ளது. இவ்­வாறு அனைத்து காலங்­க­ளுக்கும் பொருந்­து­கின்ற தீபா­வளி போன்ற விழாக்கள் ஆன்­மீக வழி­பாட்டுப் பழக்கவழக்­கங்­களின் மூலம் தூய்மைப்படுத்தப்படுவதன் காரணமாக அதன் உன்னத குணவியல்புகள் எதிர்காலத்திலும் நிலைத்திருத்தல் இன்றியமையாததாகும்.

இலங்கையில் வாழும் சகல இந்துக்களுக்கும் “இதய பூர்வமான பக்திப்பெருமித தீபவொளி வீசும் தீபாவளிப் பண்டிகை” மலரட்டும் என பிரார்த்திக்கின்றேன்.