பிள்ளையானுக்கு டிசம்பர் 10 வரையில் விளக்கமறியல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கமைய அவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்றம் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலையுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள பிள்ளையான், பொலிஸாரின் தடுப்பில் இருக்கும் போது, இராணுவத்தினரால் கடத்தப்பட்ட பலரைத் தாம் கொலைச் செய்ததாக ஒத்துக் கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிள்ளையானிடம் தொட்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என குற்றத் தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் கோரியதற்கு அமைய பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.