Breaking News

விசாரணை நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்-முஸ்லிம் காங்கிரஸ்

ஐக்­கிய நாடுகள் சபையில் நிறை­வே­றிய அமெ­ரிக்­காவின் பிரே­ரணை தீர்­மா­னத்தை அர­சாங்­கமும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ஏக­ம­ன­தாக ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க விட­ய­மாகும்.
சர்­வ­தேச உத­வியை தட்­டிக்­க­ழிக்­காது அர­சாங்கம் ஏற்­றுக்­கொண்­டமை நாட்டை பாது­காக்க உத­வி­யுள்­ள­தாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச்­செ­ய­லாளர் ஹசன் அலி தெரி­வித்தார்.இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் விசா­ர­ணைக்கு இலங்கை முஸ்­லிம்­களும் பூரண ஒத்­து­ழைப்பு வழங்­க­வேண்டும் எனவும் அவர் வலி­யு­றுத்­தினார்.

ஐக்­கிய நாடுகள் சபையில் அமெ­ரிக்­காவின் பிரே­ர­ணையை ஏக­ம­ன­தாக அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் நிலைப்­பாட்டை வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள அமெ­ரிக்­காவின் பிரே­ரணை எமது நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது. அமெ­ரிக்கா முன்­வைத்த இந்த பிரே­ர­ணையை ஐக்­கிய நாடுகள் சபையின் 47 நாடு­களும் ஏக­ம­ன­தாக ஆத­ரித்­துள்­ளன. அதேபோல் எமது அர­சாங்­கமும் இந்த பிரே­ர­ணையை ஏற்­றுக்­கொண்­டுள்­ள­துடன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் அத­ரவு தெரி­வித்­துள்­ளது.

ஆகவே இவ்­வாறு அனை­வரும் ஏற்­றுக்­கொள்ளக் கூடிய வகையில் ஒரு தீர்­மானம் வெளி­வந்­தி­ருப்­பது ஆரோக்­கி­ய­மா­ன­தொரு விட­ய­மாகும். கடந்த 2002ஆம் ஆண்டு இவ்­வா­றா­ன­தொரு வாய்ப்பு எமக்குக் கிடைத்­தது.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் சர்­வ­தேச தலை­யீட்­டுடன் இலங்­கையின் இனப்­பி­ரச்­சி­னைக்கு சுமு­க­மான முறையில் தீர்­வு­கான ஒரு வாய்ப்பு கிடைத்­தது. ஆனால் அப்­போது எமது தரப்­பினர் அந்த வாய்ப்பை தட்­டிக்­க­ழித்து செயற்­பட்­டதன் விளை­வாக இலங்­கையில் இன­ரீ­தி­யான ஒரு ஆயுத யுத்தம் பல­ம­டைந்­த­துடன் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்­க­ளையும் நாம் இழக்க நேரிட்­டது.

எனினும் இப்­போது மீண்டும் ஒரு வாய்ப்பு எமக்கு கிடைத்­துள்­ளது. அதுவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஆட்­சியில் அதே­போன்­ற­தொரு தீர்வு கிடைத்­துள்­ளது. இம்­முறை நாம் தட்­டிக்­க­ழிக்­காது சர்­வ­தே­சத்­துடன் இணைந்து செயற்­பட தயா­ரா­கி­யி­ருப்­பது நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்க நல்­ல­தொரு வாய்ப்­பாக அமைந்­துள்­ளது.

அதை அர­சாங்­கமும் தமிழர் தரப்பும் தவ­ற­வி­ட­மாட்­டார்கள் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. மேலும் இம்­முறை ஐக்­கிய நாடுகள் சபையில் இலங்கை முஸ்­லிம்கள் தொடர்­பிலும் முக்­கிய கவனம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கடந்த காலத்தில் இலங்­கையில் முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்கள் மற்றும் மத ரீதியில் முஸ்­லிம்கள் மீது மேற்­கொள்­ளப்­பட்ட அடக்­கு­முறை சம்­ப­வங்கள் தொடர்பில் ஐ.நா ஆணை­யாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

ஆகவே இலங்­கையில் நடை­பெ­ற­வி­ருக்கும் விசா­ர­ணை­களின் போது இலங்கை முஸ்­லிம்கள் அனை­வரும் இந்த விசா­ர­ணைக்கு முழு­மை­யான ஒத்­து­ழைப்பு வழங்கி செயற்­பட வேண்டும். அதேபோல் நாட்டில் புதிய அர­சியல் அமைப்பொன்று உருவாக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

அரசாங்கமும் சர்வதேசத்திடம் இந்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளது. ஆகவே இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை தமிழ் பேசும் மக்கள் தவறவிடக்கூடாது. தமிழ் முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு புரிந்துணர்வுடன் செயற்பட்டு எமது உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.