மன்னார் கூட்டு மனித புதை குழி எந்தக் காலத்திற்குரியது என ஆராயப்பட உள்ளது
மன்னார் மனித புதைகுழி எந்தக் காலத்திற்குரியது என்பது குறித்து நிபுணர்களின் ஊடாக ஆராயப்பட வேண்டுமென நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உடல் பாகங்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டுமென சட்டத்தரி ரத்தினவேல் கோரியுள்ளார்.
இந்த எலும்புக் கூடுகள் எந்தக் காலத்திற்கு உரியவை என கண்டறியப்பட்டால் மட்டுமே அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். கூட்டு மனித புதை குழி தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.