உள்ளூராட்சித் தேர்தலில் சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ள சோமவங்ச கட்சி!
ஜே.வி.பி.யின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்கவின் தலைமையிலான கட்சி, எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியி டவுள்ளது.
ஜே.வி. பி. கட்சியின் முன்னாள் தலைவர் சோமவங்க அமரசிங்க, கட்சிக்குள் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து சில மாதங்களுக்கு முன்னர் அக்கட்சியை விட்டு விலகினார்.
அத்துடன் தற்போதைய தலைவர் அனுர குமார திசாநாயக்கவின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சிக்கும் அவர், ஜே.வி.பி.க்கு எதிராக புதிய கட்சியொன்றையும் துவக்கியுள்ளார். அக்கட்சிக்கு ஜனதா சேவக கட்சி (மக்கள் சேவகன் கட்சி) என்றும் பெயர் சூட்டியுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது தமது கட்சி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.