விமல் இனவாதத்தினை தூண்டுகின்றார்: பி ஹரிசன்
இனவாதத்தினை தூண்டி இனங்களுக்கிடையில் பிரிவினையினை ஏற்படுத்தும் முயற்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஈடுபட்டுள்ளதாக கிராமிய பொருளதார அமைச்சர் பி ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்த்தன உட்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் விஹாரமாதேவி பூங்காவில் குப்பையாக பேசினர். ஐக்கிய நாடுகளின் கலப்பு நீதிமன்றம் தொடர்பிலேயே இந்த பேச்சுக்கள் இடம்பெற்றன.
இந்நிலையில் விமல் வீரவன்ச, தமது மனைவி சசி வீரவன்ச அடையாள அட்டை துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் அங்கு அவரால் ஹைபிரைட் தொடர்பில் தெரிந்து கொள்ளமுடியும்’ என்று ஹரிசன் குறிப்பிட்டார்.
இதேவேளை ராஜபக்சவின் ஆட்சியின்போதே சிரச, சியத்த ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. எனினும் இன்று அவர் ஊடக சுதந்திரம் இல்லை என்று கூறுகிறார் என்றும் ஹரிசன் சுட்டிக்காட்டினார்.