எக்னெலிகொட விசாரணைகளுக்கு இராணுவம் பூரண ஒத்துழைப்பு
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என ராணுவம் அறிவித்துள்ளது.
கிரித்தலே இராணுவ முகாமில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
இந்த விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.விசாரணைகளை நடாத்த புலனாய்வுப் பிரிவினருக்கு தேவையான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குமாறு இராணுவத் தளபதி, உரிய அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.எக்னெலிகொட காணாமல் போன விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 சந்தேக நபர்களும் கிரித்தலே முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.