Breaking News

சரணடைந்த நபர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளனர் – பரணகம அறிக்கை

சரணடைந்தவர்கள் காணாமல் போகச் செய்யப்பட்டுள்ளதாக மெக்ஸ்வல் பரணகம அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

படையினரிடம் சரணடையுமாறு கோரி அதன் அடிபடையில் சரணடைந்தவர்களில் ஒரு தொகுதியினர் காணவில்லை.நடேசேன் புலித்தேவன் உள்ளிட்டவர்கள் வெள்ளைக் கொடி ஏந்தி சரணடைந்தமை, செனல்4 சம்பவம் மற்றும் பாலசந்திரன் சம்பவம் போன்றன குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பிலான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.உச்ச நீதிமன்றில் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் தனியான ஒர் அலகினை நிறுவி விசாரணை நடத்தப்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.