சகல தரப்பினருடனான ஆலோசனையுடனேயே உள்ளக பொறிமுறையை தயாரிக்கவுள்ளோம் - விஜேதாச
அனைத்துத் தரப்பினருடனான ஆலோசனைகளின் பின்னர் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற் கும் பொறிமுறையொன்றை தயாரிக்க இருக்கின்றோம்.
இந்த பொறிமுறையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு, காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம், நீதிமன்றப் பொறிமுறை, இழப்பீடு வழங்கும் பொறிமுறை என்பவை நிறுவப்படவுள்ளன நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
யுத்தத்தால் சேதமடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெற்றிகொள்வதும் எமது நோக்கமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். மெக்ஸிகோவில் நேற்று முன்தினம் நடைபெற்ற திறந்த அரசாங்க பங்குடமை என்ற சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில் :
இந்த வருடத்தில் இரண்டு வெற்றிகரமான தேர்தல்களில் இலங்கை மக்கள் மிகவும் அமைதியான முறையில் மாற்றமொன்றுக்காக வாக்களித்திருந்தனர். குறிப்பாக கிட்டத்தட்ட 10 வருடங்களாக நாட்டில் காணப்பட்ட ஏகாதிபத்தியவாத்திற்கு மக்கள் முடிவு கட்டினர். கடந்த அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மை இன்மை பொறுப்புக்கூறல் இன்மை என்பவையே மக்களின் இந்த மாற்றக் கோரிக்கைக்கு வழி வகுத்தது. அதுமட்டுமன்றி மிகவும் அமைதியான முறையில் இந்த மாற்றத்தை மக்கள் மேற்கொண்டிருந்தனர்.
நாட்டின் தலைவிதியை தீர்மானிப்பதில் மக்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம் என்பதை மக்கள் நிரூபித்துள்ளனர். இலங்கை அரசாங்கமும் மக்களும் திறந்த அரசாங்க திட்டமில் செயற்பாட்டில் பங்கெடுப்பதற்கு தயாராகியுள்ளனர். இது எமது அரசாங்கத்தின் நோக்கமாகவும் காணப்படுகிறது. அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக தகவலறியும் உரிமையை நாங்கள் அடிப்படை உரிமையாக மாற்றியிருக்கிறோம். 19 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை வலுவிழக்கச் செய்ததுடன் பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்கியுள்ளது.
வெகு விரைவில் தகவலறியும் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம். ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதும் சட்டத்தின் ஆட்சிப்படுத்தலை பலப்படுத்துவதும் அரசாங்கத்தின் முதன்மை நிகழ்ச்சித் திட்டமாகும்.
கடந்த சில வருடங்களில் இடம் பெற்ற ஊழல்கள் தொடர்பில் ஆராய்வதற்கு ஊழல் எதிர்ப்பு செயற்பாடுகளை பலப்படுத்தியுள்ளோம். குறிப்பாக பாரிய ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றையும் நியமித்திருக்கின்றோம். அதுமட்டுமன்றி 19 ஆவது திருத்த சட்டத்தின் ஊடாக அரசியலமைப்பு பேரவை நிறுவப்பட்டுள்ளது. இதில் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளும் இடம் பெறுகின்றனர். இந்த அரசியலமைப்புப் பேரவையானது சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
30 வருட யுத்தத்தை கடந்துள்ள இலங்கையானது நாட்டை மறுசீரமைப்பதற்கும் நல்லிணக்கத்தையும் அபிவிருத்தியையும் முன்னெடுப்பதற்கும் வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. யுத்தத்தால் சேதமடைந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் மனங்களை வெற்றிகொள்வதும் எமது நோக்கமாகும். அதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் அண்மையில் விளக்கமளித்ததைப் போன்று அனைத்துத் தரப்பினருடான ஆலோசனைகளின் பின்னர் உண்மையைக் கண்டறிவதற்கும் நீதியை நிலைநாட்டுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்கும் பொறிமுறையொன்றை தயாரிக்க இருக்கின்றோம். இந்த பொறிமுறையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம், நீதிமன்றப் பொறிமுறை, இழப்பீடு வழங்கும் பொறிமுறை என்பவை நிறுவப்படவுள்ளன.
இந்தப் பொறிமுறையை அரசாங்கம் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல், மற்றும் சிவில் சமூக பங்களிப்புடனேய முன்னெடுப்பதற்கு ியை நிலைநாட்டுவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி பயணிப்பதற்கும் பொறிமுறையொன்றை தயாரிக்க இருக்கின்றோம். இந்த பொறிமுறையில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம், நீதிமன்றப் பொறிமுறை, இழப்பீடு வழங்கும் பொறிமுறை என்பவை நிறுவப்படவுள்ளன. இந்தப் பொறிமுறையை அரசாங்கம் வெளிப்படைத் தன்மை, பொறுப்புக்கூறல், மற்றும் சிவில் சமூக பங்களிப்புடனேய முன்னெடுப்பதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.