பிறக்கும் குழந்தைக்கு இலத்திரனியல் அடையாள இலக்கம் : ஜனவரியில் அமுல்
2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பிறக்கும் ஒவ் வொரு குழந்தைக்கும் இலத்திரனியல் அடையாள இலக்கம் வழங்கப்படவுள்ள அதேவேளை ஒவ்வொரு பிரஜைக்கும் இலத்திரனியல் அடையாள அட்டையும் வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில் தற்போதுள்ள அடை யாள அட்டை முறைமையை ரத்துச் செய்து ஒவ்வொருவருக்கும் இலத்திரனி யல் அடையாள அட்டையை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்றிட்டம் மேற் கொள்ளப்பட்டு வருவதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறு வனம் மற்றும் ஆட்பதிவு திணைக் களம் ஆகியன இணைந்து மேற்படி செயற் றிட்டத்தை தயார்ப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. பிறக்கும் குழந்தைக்கு அடையாள இலக்கம் வழங்கப்படுவதன் ஊடாக அக்குழந்தையின் அனைத்து தக வல்களும் இலத்திரனியல் மயப்படுத்தப் படுகின்றன.
இவ்வாறு பிறக்கும் குழந்தை முதல் 16 வயது வரையான சிறுவர்கள் வரை இலத்திரனியல் அடையாள இலக்கம் வழங்கப்பட இருப்பதாகவும் 16 வயதை பூர்த்தியடைந்த பின்னர் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்குவதற்கு நடவ டிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ரவி கருணாநாயக்க மேலும் தெரிவித்துள் ளார்.