ஒஸ்லோவில் துணை முதல்வராக இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்
நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண்ணொருவர் துணை முதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
கம்சாயினி குணரத்தினம் என்ற பெண், மிக நீண்ட காலமாக ஒஸ்லோவில் வசித்து வருகின்றார்.இடதுசாரி தொழிலாளர் கட்சி சார்பில் இவர் தலைநகர் ஒஸ்லோவின் துணை முதல்வராக தெரிவாகி உள்ளார்.
கம்சாயினி குணரத்தினம் 2011 ம் ஆண்டு ஒஸ்லோவுக்கு அருகில் உள்ள உத்தேயா தீவில், பாசிஸ பயங்கரவாதி நடத்திய தாக்குதல் சம்பவத்தில் உயிர் தப்பியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.