மிஸ்ராவை காப்பாற்றிய பெண்
கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா மீதான வழக்கை பெங்களூர் பெண் திரும்பப் பெற்றுள்ளார். இதையடுத்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா மீது பெங்களூர் பொலிஸ்
பதிவு செய்த வழக்கு திரும்ப பெறப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் ஒரு பெண்ணை மிஸ்ரா தாக்கியதாக பெங்களூர் அசோகா நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொலிஸிடம் கொடுக்கப்பட்ட அந்த புகாரில் பயிற்சிக்காக கடந்த மாதம் அமித் மிஸ்ரா பெங்களூர் வந்திருந்தார்.
அவரை சந்திப்பதற்காக அசோகா நகரில் அவர் தங்கியிருந்த நட்சத்திர ஹோட்டல் அறைக்கு கடந்த 25 ஆம் திகதி ஒரு பெண் சென்றுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரத்தில் தேனீர் கோப்பையால் அந்த பெண்ணை மிஸ்ரா தாக்கியதாக கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அமித் மிஸ்ராவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ஒரு வாரத்திற்குள் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அந்த அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில் மிஸ்ரா மீது தான் கொடுத்த புகாரை திரும்பப் பெறுவதாகவும் நாங்கள் இருவரும் பழைய நண்பர்கள்.
வருங்காலத்திலும் நண்பர்களாக தொடருவோம் என மிஸ்ரா மீது புகார் கொடுத்த பெண் தெரிவித்துள்ளார்.