நல்லிணக்கத்தை பிரதானமாகக் கொண்ட புதிய அரசியலமைப்பு திட்டம் தயாரிக்கப்படும்
உலகத்தின் மிகவும் கொடூரமான பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியமையினால் பல்வேறு அனுபவங்களை நாம் பெற்றுக்கொண்டோம்.
தற்போது பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் யுத்தத்தினால் பெற்றுக்கொண்ட பலவிதமான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் அந்த நாடுகளுக்காக குரல் கொடுக்கவும் இலங்கை புரண தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறப்பான வேலைத்திட்டத்தை நான் முன்னெடுப்பேன். மேலும் நல்லிணக்கத்தை பிரதானமாக கொண்ட புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் வேலைத்திட்டத்தினை கருத்தொருமைப்பாட்டு அரசாங்கம் துரிதப்படுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகளின் 70 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
சுமார் 70 வருடகால நிறைவில் உலக சமாதானம், பாதுகாப்பு, மற்றும் அபிவிருத்தி குறித்தான நடவடிக்கையில் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டது என்பதனை எந்தவொரு விவாதமுமின்றி நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.
மேற்குறிப்பிடப்பட்ட விடயதானங்கள் தொடர்ந்தும் ஐக்கிய நாடுகள் சபைக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் அமைப்பில் அங்கத்துவம் பெற்று 60 வருடக்காலங்களில் இலங்கையானது ஐக்கிய நாடுகளின் அனைத்து வேலைத்திட்டங்களுக்குமான பூரண பங்களிப்பை இலங்கை வழங்கியுள்ளது.
இலங்கையானது ஐக்கிய நாடுகளின் பிரகடணத்திற்கு என்றும் மதிப்பளித்து செயற்படும் நாடாகும். இதற்கமைய ஜனவரி 8 ஆம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் ஊடாக சுதந்திரம், நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றினால் ஒன்றிணைந்த ஜனநாயம் புதிய யுகத்திற்கு இட்டுசெல்லப்பட்டுள்ளது.
மேற்குறித்த அம்சங்களை உள்ளடங்கிய வகையில் நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது மாத்திரமின்றி அபிவிருத்தியும் எனது அடுத்த ஐந்நாண்டு கால நோக்கமாகும்.
கருத்து வேறுப்பாடுகளுடன் காணப்பட்ட இலங்கையின் அரசியலை கருத்தொருமைப்பாட்டு அரசியல் கோட்பாட்டின் கீழ் கொண்டுவந்து, நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளையும் என்னால் ஒன்றிணைக்க முடிந்தது.
கருத்தொருமைப்பாட்டு அரசியலை கொண்டு அரசியலமைப்பின் முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கும் சுயாதீன நிறுவனங்களுக்கும் என்னால் வழங்க முடிந்தது.
இலங்கையானது யுத்ததிற்கு முகங்கொடுத்த நாடாகும். யுத்தினால் பல்வேறு பாடங்களை எமது நாடு கற்றுக்கொண்டது. உலகத்தின் மிகவும் கொடுரமான பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டியமையினால் பல்வேறு அனுபவங்களை நாம் பெற்றுக்கொண்டோம். தற்போது பயங்கரவாதத்தின் பிடியில் சிக்குண்டு தவிக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்குடன் யுத்ததின் ஊடாக பெற்றுக்கொண்ட பலவிதமான அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளவும் அந்த நாடுகளுக்காக குரல் கொடுக்கவும் இலங்கை புரணமாக தயாராக உள்ளது.
யுத்தின் முடிவடைந்த பின்னர் இலங்கையில் சமாதானம், நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு சிறப்பான வேலைத்திட்டத்தை நான் முன்னெடுப்பதற்கு நான் தயாராகவே உள்ளேன்.
மேலும் நல்லிணக்கத்தை பிரதான மயமாக கொண்ட புதிய அரசியலமைப்பினை தயாரிக்கும் வேலைத்திட்டத்தினையும் கருத்தொருமைப்பாட்டு அரசாங்கம் தற்போது துரிதப்படுத்தி வருகிறது.
நல்லிணக்கம், பாதுகாப்பு , அபிவிருத்தி, மற்றும் மனித உரிமை என்ற விடயதானங்களை தேசிய தலைவர்கள் என்ற வகையில் அவையினர் முன்னூதாரணமாக கொண்டு செயற்படவேண்டும் என்றார்.