1000 ரூபா சம்பள உயர்வு ; முதலாளிமார் சம்மேளனம் முற்றுமுழுதாக எதிர்ப்பு
தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வுக்கான போராட்டம் மீண்டும் தொடர இருப்பதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐந்தாம் கட்ட பேச்சுவார்தையும் எவ்வித இணக்கப்பாடுமின்றி தோல்வியில் முடிவடைந்துள்ளது.
தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பு மற்றும் நலன்சார் விடயங்கள் தொடர்பாக முதளாளிமார் சம்மேளனத்திற்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இந்தப் பேச்சுகள் இடம்பெற்றன.
தொழிற்சங்க பிரதிநிதகளால் முன்வைக்கப்பட்ட 1000 ரூபா அதிகரிப்பு முதலாளிமார் சம்மேளனத்தால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 4 கட்டப் பேச்சுக்களின்போதும் காணப்பட்ட நிலைமையே இம்முறை தீர்மானம் எட்டும்போதும் காணப்பட்டதாகவும் சம்பள உயர்வு குறித்த எதுவித சமிஞ்ஞைகளும் காணப்படவில்லையெனவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் அடுத்த பேச்சுக்கான திகதி தீர்மானிக்கப்படாமலேயே 5ஆம் கட்டப் பேச்சு நேற்று நிறைவுற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.