வட மாகாணசபை அமைச்சர்கள்தான் தடையாக இருக்கினமாம்-சி.வி.கே(காணொளி)
வடமாகாணசபை பொறுப்பேற்று இரண்டு
ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்ற நிலையில் மாகாணசபையின் முன்னேற்றங்கள் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பாக தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும் வடமாகாணசபை அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம் அவர்கள் பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்திருந்தார்.
அந்த பேட்டியின்போதே வடமாகாணசபை அமைச்சர்கள் தொடர்பாக பொங்கி எழுந்திருக்கிறார் வடமாகாணசபை நியதிச்சட்டங்களை இயற்றி சிறப்புடன் செயற்பாடாமைக்கு அந்தந்த துறைசார் அமைச்சர்களே பொறுப்பு என்றும் அவர்கள் சிறப்பாக பணியாற்றினால் வடமாகாணசபையை சிறப்பாக கொண்டுசெல்ல முடியும் என்றும் தெரிவித்த அவர் சிறப்பாக பணியாற்றுவதற்கு அமைச்சர்களின் செயர்திறனின்மையே காரணம் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக தனக்கு வரவேண்டிய விவசாய அமைச்சு பதவி பறிபோய்விட்டதாக கருத்து தெரிவித்தார். அதன்போது குறுக்கிட்ட நிருபர் அந்த பதவி உங்கள் கட்சிக்கு வந்த ஐங்கரநேசனிடம்தானே கொடுக்கப்பட்டது எனத்தெரிவிக்க இல்லை அவர் தமிழரசு கட்சி உறுப்பினரல்ல அவர் எந்தகட்சியையும்சாராத உறுப்பினர் என்றும் கல்வி அமைச்சரிடம் கடந்த ஒரு ஆண்டுகாலமாக தான் கடிதம் எழுதியிருக்கிறாராம் ஆனால் இன்னும் அவர் பதில் அனுப்பவில்லை என்றும் கருத்து தெரிவித்த அவர் மேலும் பல விடயங்களை இந்நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவருடைய பேட்டியின் சில பகுதிகள் இணைக்கப்படுகிறது.
முழுமையான காணொளி