தமிழ் மக்களை அரசாங்கம் ஒருபோதும் கை விடாது - பிரதமர் ரணில்
தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வை எமது அரசாங்கம் நிச்சயம் பெற்றுக் கொடுக்கும். தமிழ் மக்களை அரசாங்கம் ஒருபோதும் கை விடாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இறுதி யுத்தத்தின்போது அம்மக்கள் அனுபவித்த துன்பங்களுக்கும், அம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப் பட்ட மனித உரிமை மீறல்களுக்கும் காரணமானவர்களைச் சட்டத்தின் முன்நிறுத்தி நிச்சயம் தண்டனை பெற்றுக் கொடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.
அரச ஊடகமொன்றுக்கு அவர் வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.