எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவு வழங்குவோம் - பான் கீ மூன்
எதிர்காலத்திலும் இலங்கைக்கு ஆதரவு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு ஆதரவு வழங்கி இருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 70 ஆண்டு நிறைவு நினைவு தினம் மற்றும் உறுப்பு நாடு என்ற வகையில் இலங்கை இணைந்து 60 ஆண்டுகள் நிறைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுடன் மேலும் தொடர்ந்து பணியாற்றுவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.