வன்முறையை இனி எப்போதும் எங்களால் ஆதரிக்க முடியாது – சம்பந்தன்!
எமது இனம் வன்முறையை பின்பற்றியதால் தான் எமது இனத்திற்கு பெரும் அழிவு ஏற்பட்டது. தற்போது அது ஒரு முடிவுக்கு வந்துள்ளது வன்முறையை நாங்கள் இனி எப்போதும் ஆதரிக்க முடியாது.
அஹிம்சையை நாம் பின்பற்ற வேண்டும் அஹிம்சைக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். மஹாத்மா காந்தியின் ஜனனதினமும் சர்வதேச அஹிம்சை தினமும் யாழ் இந்திய தூதரகத்தின் ஏற்பாட்டில் நேற்று (02) யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மஹாத்மாக காந்தியின் வாழ்க்கைத்தத்துவங்கள் குறித்து பல்வேறு சிறப்புரைகளும் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றது. சிறுவர் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன்,பாராளுமன்ற உறுப்பினர்களான ஈஸ்வரபாதம் சரவணபவன்,டக்ளஸ்தேவநந்தா மற்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன்,சர்வ மததலைவர்கள் கலைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.