இலங்கையின் நல்லிணக்க பயணம் சவாலானது : அமெரிக்கா
இலங்கையின் நல்லிணக்க பயணமானது சவால்மிக்கது. இலங்கை அரசாங்கமும் மக்களும் சர்வதேச சமூகமும் இணைந்து செயற்பட்டால் அந்த சவாலை வெற்றி கொள்ள முடியும் என்று ஜெனிவாவில் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அந்நாட்டின் ஜெனிவாவுக்கான பிரதிநிதி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
‘இலங்கை தொடர்பான அறிக்கையை வெளியிட்டமைக்கு ஐ.நா. மனித உரிமை ஆணையாளருக்கு நன்றி தெரிவிக்கிறோம். அத்துடன் சிறந்ததொரு அர்ப்பணிப்பை வெளிக்காட்டிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும் நன்றி கூறுகிறோம். சட்டவிரோத கொலைகள், கட்டாய கடத்தல்கள், பாலியல் வன்முறைகள், சித்திரவதைகள் போன்ற ஐ.நா. மனித உரிமை விசாரணை அறிக்கையின் கண்டு பிடிப்புகள் முக்கிய குற்றச்சாட்டுக்களாக இருக்கின்றன.
எவ்வாறெனினும் இலங்கையின் புதிய அரசாங்கம் முன்னேற்றங்களை வெளிக்காட்டியுள்ளது. ஜனநாயகத்தை பலப்படுத்துதல், காணிகளை மீள் வழங்குதல், இடம்பெயர் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு உள்ளிட்ட மேலும் பல விடயங்களை புதிய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அத்துடன் நீதியை நிலைநாட்டுவதுடன் பொறுப்புக்கூறலை காண வேண்டியுள்ளது.
நம்பகரமான நல்லிணக்க செயற்பாடு இலங்கையின் சிறந்த சமாதானத்துக்கும் பாதுகாப்புக்கும் வழிவகுக்கும். 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கைக்கு புதிய ஆரம்பமாகும். மனித உரிமை ஆணையாளரை அந்த நாட்டுக்கு வர வழைத்துள்ளது. இது சிறந்ததொரு பலமான அறிகுறியாக தென்படுகின்றது.
மனித உரிமை பேரவையுடன் இலங்கை இணைந்து செயற்படுவதை பாராட்டுகிறோம். இலங்கையின் அனைத்து மக்களினதும் எதிர்காலம் நீதி, நல்லிணக்கம், சட்டத்தின் ஆட்சிப்படுத்தல், சுதந்திரத்தை மதித்தல் என்பதிலேயே தங்கியுள்ளது.
இலங்கையின் நல்லிணக்க பய ணமானது சவால்மிக்கது. இலங்கை அரசா ங்கமும் மக்களும் சர்வதேச சமூகமும் இணைந்து செயற்பட்டால் அந்த சவாலை வெற்றி கொள்ள முடியும்’ என்றார்.