அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தான் வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அமெரிக்க வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தானிடம் 90 -110 அணு ஆயுதங்கள் இருந்ததாகவும், மேலும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் தயாரிப்பதிலும் பல நிலைகளை கடந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அணுவாயுதப் நோட்புக் அமைப்பை சேர்ந்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, தற்போது பாகிஸ்தானிடம் 110 முதல் 130 அணு ஆயுதங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 அண்டுகளில் பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் எண்ணிக்கை 220 முதல் 250 ஆக அதிகரிக்க கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.