Breaking News

காணாமல் போனோர் ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றில் சமர்பிக்க தீர்மானம்

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் அந்த ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன் சில்வா தலைமையில் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையும் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

யுத்தம் இடம்பெற்ற மற்றும் அதற்குப் பின்னரான காலப்பகுதியில் வடக்கு, கிழக்கில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதியரசர் மெக்ஸ்வல் பரணகம தலைமையில் மூவரடங்கிய ஆணைக்குழுவொன்றை தமது ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அமைத்திருந்தார்.

காலப்போக்கில் போர்விதி மீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்தும் வகையில் அதன் விடயப்பரப்பை மஹிந்த ராஜபக்ச விஸ்தரித்தார்.அத்துடன் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்காக டெஸ்மன்டி சில்வா தலைமையில் சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றும் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பததிவுசெய்யப்பட்டுள்ளதோடு, 5 ஆயிரம் வரையிலான முறைப்பாடுகள் படையினருக்கு எதிராக காணப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த ஆணைக்குழு கடந்த மார்ச் மாதம் இடைக்கால அறிக்கை ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்திருந்தது. இந்த நிலையில் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளடங்கியிருக்கும் விடயங்களை மக்கள் தெரிந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்தில் அதனை சமர்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.